Wednesday, September 10, 2008

ஏங்கும் மனம் .......

தொலைதூரத்தில் எங்கோகேட்கும் 
மகிழ்ச்சி ஆரவாரம் ......... 
விழிகளில் சிறு துளியாய் பெருகும்
கண்ணீர்....... 
விழாவின் மகிழ்ச்சி சிறிதும் இன்றி
தொலைதூரத்தில் நான்.......


--
கண்ணன்

(வெள்ளிக்கிழமை ஓணம் பண்டிகை ஊரில் எல்லாரும் மகிழ்ச்சியாக கொண்டாட்டத்தை ஆரம்பிதிருப்பர்கள். என்னால் இந்த வருடம் செல்ல இயலவில்லை. ............)

Tuesday, September 9, 2008

இன்றைய தமிழகத்தின் தேவைகள்......................

பசித்தவனுக்கு மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடுப்பதே சிறந்தது. இன்றய விலைவாசிக்கு, ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுப்பது ஒரு தீர்வாகாது. இதர பொருட்கள் வாங்க அவன் செலவு செய்யும் தொகை, அரிசி வாங்குவதை விட முப்பது மடங்கு இருக்கிறது. நானூறு கோடி ரூபாய் செலவில் ஒரு ரூபாய் அரிசி திட்டத்தை நிறைவேற்றுவதை விட நல்லது அத்தொகையை உபயோகப்படுத்தி மளிகை பொருட்களின் விலையை குறைப்பதற்கு முயற்சிக்கலாம், பெட்ரோலிய பொருட்களின் வரியை குறைக்கலாம். இப்பொழுது மின்சாரம் இருக்கும் நேரத்தை விட மின்சாரம் இல்லாத நேரம் தான் அதிகமாக உள்ளது. சரி ஜனரேட்டர் போடலாம் என்றல் டீசல் தட்டுபாடு எவ்வாறு இங்கு வாழ்வது? நண்பர் ஒருவரின் பதிவில் கண்ட கவிதை "இந்த ஆட்சியில் வாழ்வதை விட சாவது மேல் என்று மின் கம்பியைத் தொட்டால், சே.. மின்வெட்டாம்". உண்மைதான்.
சரி இவர்கள் வழங்கும் அரிசியாவது ஒழுங்காக போய் சேருகிறதா என்றால் அதுவும் இல்லை. கடத்தல்காரர்கள் கொண்டு செல்கிறார்கள். மின் சிக்கனம் என்று கூறுகிறார்களே தவிர அதிகார மட்டத்தில் இன்று வரைக்கும் சிக்கனம் ஆரம்பிக்கவே இல்லை என்று தான் கூற வேணும். வீணாக ஓடும் மின் விசிறிகள், பகலிலும் எரியும் மின் விளக்குகள். யாரும் கண்டு கொள்வதே இல்லை. அமைச்சர் ஒருவர் அதிகாலை மின்தடை ஏற்படின் ஆழ்ந்த உறக்கம் இருந்தால் கொசு அல்லது யானை கடித்தால் கூட தெரியாது என்கிறார். தொழில் துறை அமைச்சரோ இன்னும் இரண்டு அரை ஆண்டுகள் இப்படித்தான் இருக்கும் சிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் பொருத்தருள வேண்டும் என்கிறார். பல பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு இருபத்திநாலு மணி நேரம் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கும் அரசாங்கத்திற்கு உள்நாட்டு முதலீட்டார்களுக்கு ஏன் மின்சாரம் வழங்க முடிவதில்லை? தேசியம் பேசும் கமரேடுகளும் இதை பற்றி கண்டு கொள்வதே இல்லை. தமிழா ஏன் உன் நிலை இவ்வாறு உள்ளது ? நீ யோசிக்கவே மாட்டாயா ? இவ்வாறு செல்வதானால் நம் நிலை இன்னும் மோசமாக சென்று விடும்.

பெரியார் செய்தது என்ன ?

ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று அவரது வாழ்க்கை குறிப்பில் இவ்வாறு... "கங்கை ஆற்றின் கரையில் உள்ள இந்துக்களின் புனித நகரமான காசி நகரை (வாரணாசி) இவர் அடைந்தார். அங்கோ அன்ன சத்திரங்களில் இந்து மதத்தின் மற்றச் சாதியினர்க்கு அனுமதி மறுக்கப்பட்டுப் பார்ப்பனர்க்கு மட்டுமே தனிமதிப்புடன் உணவு வழங்கப்பட்டதால், திராவிட இனத்தவரான இவரால் எளிதாகச் சத்திரத்து இலவச உணவைப் பெற முடியவில்லை. சில நாள்கள் மிகக் கடுமையாகப் பட்டினியால் வாடிய இந்த எழில் தோற்றம் உள்ள இளைஞர் இராமசாமி, வேறு எந்த நேரிய வழியும் தோன்றாத நிலையில், ஓர் அன்ன சத்திரத்தில் நுழைவதற்கு முயன்றார். ஆனால் இவரது கரிய மீசை காட்டிக் கொடுத்துவிட்டது. எனவே, வாயில் காவலாளி சத்திரத்திற்குள் இவர் நுழைவதைத் தடுத்ததுடன், முரட்டுத்தனமாகத் தெருவிலே இவரைத் தள்ளிவிட்டான். அந்த நேரம், சத்திரத்தின் உள்ளே விருந்து முடிந்து விட்டதால், எஞ்சிய சோற்றுடன் எச்சில் இலைகள் தெருவிலே வீசி எறியப்பட்டன. கடந்த சில நாள்களாக வாட்டிய கடும் பட்டினியோ, அந்த எச்சில் இலைச் சோற்றைத் தெரு நாய்களுடன் போட்டியிட்டுத் தின்பதற்குக் கட்டாயப்படுத்தியது இராமசாமியை. காசியில் துளி அளவும் இரக்கம் அற்றுப் பார்ப்பனர் இழைத்த அவமானம் பெரியார் உள்ளத்தில் ஆழமான காயத்தை உண்டாக்கிற்று. அதுவே ஆரிய இனத்தின் மீதும் அவர்களின் படைப்புகளான கணக்கற்ற கடவுள்கள் மீதும் அழுத்தமான வெறுப்பு நெருப்பைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது. அவருக்கு அன்று ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அவர் ஊர் திரும்பியதும், ஊர் மக்களை வைத்து பழி வாங்கினார். இது தான் நடந்தது. உண்மையிலேயே அவர் பகுத்தறிவு பிரச்சாரம் செய்தார் எனில் , கிறிஸ்தவர்களின் ஞானஸ்தானம் எடுப்பதை ஏன் கண்டிக்கவில்லை. ஹிந்து இறந்தவரை அடக்கம் செய்வதை விமர்சித்த அவர் கிறிஸ்தவர்கள் செய்வதை ஏன் விமர்சிக்கலவில்லை. அவருடைய சில பகுத்தறிவு கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு எனிலும், அவரும் திராவிட கழகத்தினரும் முழுதும் இந்து எதிர்ப்பு பிரச்சாரம் மட்டுமே நடத்துகின்றனர். தலித்துகளுக்காக தான் அவர் குரல் கொடுத்தார் என்றால் அவர் முதலில் தலித் என்ற அடைமொழியை அவர்களிடம் இருந்து மாற்றியிருக்க வேண்டும். பார்ப்பானுக்கு எதிராக அவர்களை தூண்டி விட்டவர், தலித்தை தலிதகவே வளர்த்தார். இன்றும் அவர்கள் அப்படி தான் இருகின்றனர். இன்று பெரியார் வழியில் வந்து ஆட்சியில் இருப்பவரால் பெரியார் சொன்னது போல, தமிழ்நாட்டில் இனிமேல் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி இல்லை, பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு எல்லாம் என்று அறிவிக்க இயலுமா?. கண்டிப்பாக இயலாது அவர் கொண்டு வந்தாலும் தலித்துகள் ஒத்துக்க மாட்டார்கள், திராவிட கழகத்தினர் விட மாட்டார்கள். அவர்களுக்கு என்றும் தலித்துகள் தேவை, அவர்கள் இல்லையேல் அவர்களுக்கு வேறு வேலை இல்லை எனவே மீண்டும் அவர்களை அடிமை படுத்த மட்டும் தான் பார்பார்கள். விநாயகர் சதுர்த்திக்கு கட்டுரை எழுதிய வீரமணி ஆணைமுகத்துடன் யாரவது பிறபார்களா ? என்று கட்டுரை எழுதி உள்ளார். பகுத்தறிவு பேசும் இவரால் புனித வெள்ளி மட்டும் உயிர்ப்பு (ஈஸ்டர்) க்கு இறந்தவர் யாரவது மூன்று நாளைக்கு அப்புறம் உயிர்த்து எழுந்து வரமுடியுமா என்று கேட்க இயலுமா ?. அப்படி கேட்டால் அடுத்த நாளே தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் அவர் வீட்டின் முன்னால் திரண்டு வருவார்கள். போலி பகுத்தறிவு பேசும் இவர்களை நம்பி இளைய தலைமுறையினர் ஏமாற மாட்டார்கள்.

மதவாதம் எனது பார்வையில்

இன்றைய அரசியல் கட்சிகள் எதெற்கெடுத்தாலும் மதவாதம் மதவாதம் என்று கூறுகிறார்கள். அவர்களில் எத்தனை பேர் உண்மையிலே மத சார்பற்றவர்கள். பா.ஜ.க. மதவாத கட்சி என்கிறார்கள், என்னுடைய பார்வையில் பா.ஜ.க. தவிர மற்ற கட்சிகள் தான் மதவாத போர்வையில் தங்களை போர்த்தி கொண்டுள்ளன. ஹிந்து மதத்தில் உள்ளவர்கள் இஸ்லாமியனால் தாக்கபட்டல்ல்லும், அவர்களுடைய வழிபாட்டு இடங்களில் வெடி குண்டு வைத்தாலும் இங்கு கண்டனம் தெரிவிக்கவோ, அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவோ எந்த அரசியல் கட்சியும் முன்வருவதில்லை. ஆனால் ஒரு இஸ்லாமியன் கையை அவனே ஒரு ஒரு கத்தியை வைத்து கிழித்தாலும், எல்லா அரசியல் கட்சியினரும் ஆர்பாட்டம் , மறியல் என நாட்டயே நடுங்க வைத்து விடுவார்கள். ஒரு இந்து கடவுளை நிர்வாணமாக படம் வரைந்தால் அது கலையாம், அதே அவர்கள் நபியை கார்டூனாக வரைந்தால் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாம், கார்டூன் வரைவது கலை இல்லையா?, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டுமாம். அவர்கள் என்ன இஸ்லாமிய வழிபாட்டு இடங்களில் வெடிகுண்டு வைத்தார்களா? இல்லை இஸ்லாமியர்களை கொன்று குவிதார்களா? நாடு முழுவதும் வெடி குண்டு வைக்கும் சிமி அமைப்பை தடை செய்ய கூடாதாம்? என்ன கொடுமை இது? பா.ஜ.க இந்து மதவாத கட்சி என்றால் மற்றவர்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதவாத கட்சிகள் தாம். இங்கு போலி மத சார்பின்மை பேசாத ஒரே ஒருவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. இந்தியாவை துண்டாட நினைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு துணை போவது மதவாதமா, அனைவருக்கும் பொது சிவில் சட்டம் கொண்டு வர நினைக்கும் பா.ஜ.க பயங்கரவாத கட்சியா?. அடுத்து தமிழக பகுத்தறிவுவாதிகள் , ஹிந்து அமைப்புகளையும், இந்து கடவுள்களையும் விமர்சிக்கும் இவர்களுக்கு, இஸ்லாமிய மதத்தையோ, கிறிஸ்தவ மதத்தையோ விமர்சிக்க தைரியம் உண்டா? விமர்சிக்க என்ன எதிராக ஒரு கருத்தை சொன்னாலே கிழித்து விடுவார்கள். ஆனால் இந்துவை பற்றி என்ன சொன்னாலும் கண்டுக்கவே மாட்டான், சரியான இளிச்சவாயன் என்று புரிந்து வைத்திருகிறார்கள். பாபாஜி ஆயிரம் வருடங்களுக்கு மேல் உயிரோடு இருக்கிறார் என்று சொன்னால், கிண்டலடிப்பவர்கள், இறந்த பின்பு ஒருவர் உயிர்தெழுந்தார் என்று சொன்னால் நம்புவார்களாம். என்ன கொடுமை இது? தலைவர் ஒருவர் ஒரு விழாவில் கூறினார் என்னை துரோணர் என்று கூறாதிர்கள் என்று, அன்று துரோணர் ஏகலைவனின் கட்டைவிரலை குருதட்சிணையாக வாங்கினார், இன்றோ அவர் தன் வாரிசு அரசியலில் மாறன் பிரச்சினையாக வருவார் என அவருடைய அரசியல் வாழ்கையயே பறித்து விட்டார். நீங்களே சொல்லுங்கள் துரோணர் என்ற வார்த்தைக்கு அவர் தகுதியனவாரா இல்லையா என்று? தனிமனித விமர்சனத்தை என்றுமே நான் விரும்பியதில்லை, வேறு ஒரு கவிஞர் கவிதை எழுதி இருந்தார், கர்நாடகத்தில் இருந்ப்பவனும் ஹிந்து, தமிழகத்தில் இருப்பவனும் ஹிந்து, ஒரு ஹிந்துவுக்கு ஹிந்து தண்ணீர் தரமாட்டானா என்று? எனக்கு ஒரு சந்தேகம், கர்நாடகத்தில் ஹிந்து மட்டும் தான் இருக்கிறானா? இல்லை ஹிந்து மட்டும் தான் தண்ணீர் தரமாட்டேன் என்று சொன்னனா? இல்லை இங்கு ஹிந்து மட்டும் தான் தண்ணீர் கேட்டானா?.... இங்கு வேறு எந்த மதத்தில் இருப்பவர்களுக்கும் தண்ணீர் தேவை இல்லையா ? அது என்ன என்ன பிரச்சினை என்றாலும் ஹிந்துவை இழுப்பது? அப்புறம் ஒரு பகுத்தறிவு தொலைக்காட்சி விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு விடுமுறையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்கினார்களாம். ஏன் ஞாயிற்று கிழமை கூட விடுமுறை தானே, அப்பொழுது ஞாயிற்று கிழமைகளிலும் விடுமுறையை முன்னிட்டு என்று சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்க வேண்டியது தானே? அதை செய்ய வேண்டியது தானே? ஏன் ஹிந்து விழாவை வைத்து பணம் மட்டும் சம்பாதிக்கலாம், அதை வெளியே சொல்ல கூடாதாம். என்ன ஒரு பகுத்தறிவு? தன் வீட்டில் உள்ளவர்களுக்கு பகுத்தறிவு சொல்லிதர இயலாதவர்களுக்கு பகுத்தறிவுக்கான விருதாம்? என்ன கொடுமை இது....... நம் நாட்டை பொறுத்த வரைக்கும் இந்துவை எதிர்ப்பது தான் மதசார்பின்மை, சிந்தியுங்கள்...........

Saturday, September 6, 2008

தொடர்ச்சி...........

இவனெல்லாம் தொடர் பதிவு போடுறானே நீங்க நினைக்கலாம்... என்ன செய்ய..............
 ஒன்பதாம் வகுப்பில் தான் பசங்களும் பொண்ணுங்களுமா படிக்க ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில கூச்சமா தான் இருந்துது. அப்புறம் பழகிரிச்சு.
அப்புறம் என்ன.......... வழக்கம் போல வகுப்பறை சண்டைகள் தான். எங்களது கணித ஆசிரியைக்கு கண் பார்வை அவ்வளவு தெரியாது. அவங்கள விளையாட்டு காட்டுறதே ஒரு வேலையா போச்சு. அப்புறம் பத்தாம் வகுப்பு.ரொம்ப சீரியஸ் இல்லையென்றாலும் சீரியஸ் ஆக சென்றது. ஒன்பதாம் வகுப்பு விடுமுறையின் போதே வகுப்புகள் ஆரம்பித்தது.
தினமும் மதியம் வரை........... ரொம்ப கடுப்பாக இருக்கும், காலையில் இருந்து மதியம் வரை ஒரே பாடம் தான் அறுவை.... ஒரு புது கணித ஆசிரியை அவங்க கிளாஸ் கொஞ்சம் நன்றாக தான் இருந்தது. எங்கள் தமிழ் ஆசிரியை தான் வகுப்பு ஆசிரியை, அவங்க எல்லார்கிட்டயும் ரொம்ப நல்லா பேசுவாங்க, ஆனா வீட்டுல இருந்து யாரவது வந்தா போட்டு குடுத்துருவாங்க, ஆனாலும் நல்ல தான் சொல்வாங்க. அப்படி ஒரு வழியா அந்த ஸ்கூல் படிப்பும் முடிசிட்டு, டிப்ளோமோ செல்லலாம் என்று இருந்தேன்.வழக்கம் போல வீட்டுல ஆப்பு வச்சிடாங்க, மேல்நிலை படிப்பு முடிசிட்டு போகலாம் என்று , அப்ப்புறம் என்ன விதியேன்னு அந்த ஸ்கூல்லயே படின்னாங்க. நம்ம யாரு டிப்ளோமா அப்பளை பண்ணிக்கிட்டு , அப்படியே மேல்நிலையில் காமெர்ஸ் குரூப் அப்பளை பண்ணினேன், சரி காமெர்ஸ் குரூப்ன்னா நம்மள டிப்ளோமா விடுவாங்களேன்னு, ஆனாலும் விதி சதி செய்து, வேற ஒரு ஸ்கூல்ல சேர்த்து விட்டுடாங்க. கணித குரூப், அங்க ஸ்கூல்க்கு போன நாளவிட கட் அடிச்சு படத்துக்கு போன நாட்கள் தான் அதிகம்.
ஆனா நம்ம கட் அடிக்கிற நாள் பார்த்து வீட்டுல இருந்து யாரவது ஸ்கூல்க்கு வருவாங்க அது எப்படின்னு தான் இன்னைக்கு வரைக்கும் புரியாதா புதிர்........... அப்புறம் ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டு அந்த ஸ்கூல்ல ஒட்டியிருக்கேன். அங்க மனசுல எந்த ஆசிரியரும் ஓட்டலை( ஸ்கூல்க்கு போனதனே தெரியும்னு சொல்றது தெரியுது )............. அப்படி பள்ளி வாழ்கை முடிஞ்சுது. நான் படிச்சா மூணு ஸ்கூல்ல மொத ரெண்டு ஸ்கூல்ல என்ன பத்தி கேட்டா ரொம்ப நல்லவன்னு சொல்லுவாங்க, ஆனா கடைசி ஸ்கூல் இருக்கே அங்கே பாதி பேருக்கு என்னை தெரியவே செய்யாது. ஆனா அங்க தான் நான் பல விஷயங்கள் புரிஞ்சுகிட்டேன். ஒரு சில கூடா நட்புகளின் காரணமாகா நான் பட்ட அவஸ்தைகளும் அதிகம். இன்னும் சொல்ல வேண்டுமானால் நண்பர்களை பற்றி புரிந்து கொண்டேன். என்றைக்கும் அவங்க ரெண்டு நண்பர்கள் தான் எனக்கு துணையாக இருகிறார்கள்.  
இன்று வரைக்கும்................................... மீண்டும் பள்ளி நாட்கள் வருமா என்ற ஏக்கம் உள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கிறது.


Friday, September 5, 2008

மீண்டும் வருமா ?

உண்மையிலே வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருந்தது பள்ளிபருவத்தில் தான். என்னுடைய பள்ளி வாழ்கை 3 பள்ளிகளில் நடந்தது ஆரம்ப பள்ளி, மிகவும் கட்டுகோப்பான கான்வென்ட் ஸ்கூல் . அதனால் ரொம்ப ஒழுங்காக இருப்பேன். வீட்டில் இருந்து ஸ்கூல் போக ஒரு மூணு கிலோமீட்டர் இருக்கும் வயல் வரப்புகளில் நடந்து செல்ல வேண்டும். ஆனாலும் மழிசியாக இருக்கும். அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னை பிடிக்கும்( உண்மைய தான், நம்புங்க ). அப்போ நல்ல படிச்சிட்டு இருப்பேன் (யாரு கண்டான்னு கேக்குறது காதுல விழுது ) அதனால ஸ்கூல்ல எல்லாருக்கும் என்னை தெரியும். அதுல ரொம்ப பிடிச்சது எங்க வீட்டு பக்கத்துல ஒரு டீச்சர் இருக்காங்க. அவங்கள தான். ஆனா இப்போ அவங்கள பார்த்த ஏனோ ஓடி ஒளியுறேன். ஏன்னே தெரியல ( தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க ). அப்புறம் மூன்றாம் வகுப்பில் ஒரு ஆசிரியை அவங்க தான் என் கையெழுத்து அழகாக காரணம். அப்புறம் என்னை பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆயா. அவங்க கூட மூன்றாம் வகுப்பு வரை போனேன். அப்புறம் ரெண்டு வருஷம் தனிகாட்டு ராஜா தான். வழியில ஒரு குளம் வரும், அதில மழை காலத்துல மறுகால் வழியும். அப்போ கால் முட்டு அளவுக்கு தண்ணீர் இருக்கும். அப்புறம் வரப்பு மழைல இடிஞ்சு இருக்கும் அத தாண்டி குதிச்சு போகிற சந்தோசம் இருக்கே சொல்ல முடியாது. இப்போ அந்த வழி எல்லாம் மாறி போச்சு. வயல் எல்லாம் போயி ரோடு போட்டாச்சு. குளமும் கரை பெருசா கட்டி இப்போ மறுகால் எல்லாம் இல்லை. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எங்கள் தலைமை ஆசிரியைக்கு நல் ஆசிரியை விருது கிடைத்தது. அதை மிக பிரமாதமாக கொண்டாடினோம். இப்போ அந்த பள்ளிக்கூடம் எட்டாம் வகுப்பு வரை உள்ளது .

ஆறில் இருந்து பத்து வரை மற்றொரு பள்ளிக்கூடம், அங்கு சென்ற பின்பு தான் தனியாக பேருந்தில் பயணம் செய்ய ஆரம்பித்தேன். அங்கும் பரவாயில்லை. முதல் பள்ளி அளவிற்கு இல்லை என்றாலும் கட்டுகோப்பாக தான் இருந்தது. எட்டாம் வகுப்பு வரை பெண்கள் வகுப்பில் இல்லை நாங்கள் பசங்க மட்டும் தான். எங்களுக்கு ஒரு கணக்கு ஆசிரியர் வருவார், அவர் ரொம்ப கண்டிபனவரும் கூட , ஆனால் வகுப்பின் இடையே கதை சொல்லி தருவார்( வீட்டு பாடம் செய்ய விட்டால் அடி யும் கிடைக்கும்). ஆனாலும் எங்களுக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.  
அடுத்த பதிவுல தொடரும் ............. ( நாமளும் போடுவோம்ல தொடர் பதிவு )

சென்னை வாழ்க்கை

சென்னை எனக்கு மிகவும் பிடித்த ஊர். இங்கே பொழுது போவதே தெரிவதில்லை காலையில் எழுந்து ஆபீஸ் சென்று ரூம் திரும்புவது ஒரு மணி நேரம் போல உள்ளது. அதனால் தான் நான் சென்னையில் இருக்கிறேன் என்று கூட சொல்லலாம். இங்கே பிடிக்காத விஷயங்களும் நிறைய உள்ளன. கடற்கரை கேடுகெட்ட கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. அதனால் நான் கடற்கரை பக்கம் செல்வதே இல்லை. இன்றைய இளைய தலைமுறை எவ்வளவு மோசமாக நடக்கிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாகரணம். அப்புறம் உணவு, சென்னை வந்ததில் இருந்து எனக்கு பெரிய பிரச்சினையே உணவு தான். அம்மா கையால் சாப்பிட்ட திருப்தி இல்லை. சுவையும் ஓட்ட மாட்டேங்குது. அப்புறம் என்ன உயிர் வாழணுமே அதுக்காக ஏதோ சாப்பிட்டு வாழ்கைய ஓட்டுறேன். அப்புறம் காலையிலும் மாலையிலும் பேருந்து பயணம், எவ்வளவு மக்கள், பேருந்தின் உள்ளே பயணம் செய்வதை விட வெளியே தொங்கி செல்பவர்கள் தான் அதிகம். இந்த பிரச்சினைக்காக ஒன்பதரை மணி ஆபீஸ்க்கு காலைல எட்டு முற்பதுக்கே போகிறேன். மாலையில் என்ன செய்ய மெதுவாக செல்ல வேண்டியது தான். எவ்வளவு வாகனங்கள் தான் இங்கே சாலையை கடப்பதற்குள் உயிர் போயி வருகிறது. இங்கே யாருக்கும் நட்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை. பொழுது போக்காக பேசுகிறார்களே தவிர நட்பு என்ற ஓன்று இல்லை. ஏன் என்றே தெரியவில்லை. என் நண்பர்கள் போல யாரும் இன்னும் அமையவில்லை. இங்கும் நல்ல நண்பர்கள் அமைவார்கள் என்று நம்புகிறேன். என்னடா இவன் சென்னைய பற்றி குறை கூறி கொண்டே இருக்கிறேன் என்று கோபம் கூட வரலாம். ஆனால் என்ன கிராமத்தில் இருந்து வந்ததாலோ என்னவோ இன்னும் சென்னை மனதிற்கு இன்னும் பிடிக்கவில்லை. அரக்கத்தனமாக ஓடும் மனிதர்கள், இங்கு அனைவருக்கும் அவரவர் வேலையே பெரிதாக உள்ளது. நான் தங்கி இருக்கும் மேன்ஷனில் பக்கத்து அறையில் இருப்பவர்களையே தெரியவில்லை. உண்மையை சொன்னால் நான் இன்னும் பார்த்தது கூட இல்லை. இதற்க்கு பழைய மேன்ஷனே மேல்.அங்காவது நாலு பேரிடம் பேசி இருக்கலாம். அப்புறம் இடைஇடையே தோன்றும் ஊர் நியாபகம் ரொம்ப கஷ்டமப்பா சாமி. என்ன தான் என்றாலும் அம்மா கையால் சாப்பிட்டு வீட்டில் தூங்கும் சந்தோசத்திற்கு இணை ஆகாது. அடுத்த வெள்ளி கிழமை ஓணம். வீட்டிற்கு செல்லலாம் என்றால் லீவ் இல்லை. இங்கயே கொண்டாட வேண்டியது தான். அப்புறம் சென்னைய பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது, ஆமாம் நான் அதிகமாக செல்லும் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். அங்கே அடிக்கடி நாம் கொண்டு செல்லும் பைகளை பரிசோதிக்கிறார்கள் ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை. உள்ளே செல்லும் போது சோதனை செய்கிறார்கள் ஆனால் வெளியே வந்தால் ஒரு சோதனையும் கிடையாது. என்ன காரண என்று இன்னும் புரியவில்லை . நான் அதிகமாக ரயிலில் பயணம் செய்வதே கிடையாது . சென்னை வந்ததற்கு அப்புறம் தான் ரயிலில் அதிகமாக பயணம் செய்கிறேன் . முன்பு பிடிக்காமல் இருந்த ரயில் பயணம் இப்பொழுது பிடிக்கிறது. பேருந்தில் செல்வதே பிடிக்கவில்லை. நான் இன்று மட்டுமே இவ்வளவு பதிவு போட்டிருக்கும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் நான் செய்யும் வேலையின் தன்மையை பற்றி....... வேறு என்ன செய்ய இந்த வேலைக்கு வந்த பின்பு இப்படி தான் இருக்கிறது. நீங்கள் நினைக்கலாம் வெட்டியா சம்பளம் வாங்கிறானே என்று அப்படி எதுவும் இல்லை. வேலை பார்ப்பதன் இடையில் தான் இந்த வேலை.

கணினியும் நானும்

1998 முதல் நான் கணினி உபயோக படுத்துகிறேன். எங்கள் ஊரில் அப்பொழுது தன் முதன் முதலாக ஒரு கணினி பயிற்றுவிக்கும் நிலையம் வந்திருந்தது. வீட்டில் சொல்லி ஒரு வழியாக முதல் அணியில் சேர்ந்து விட்டேன். முதல் ஒரு வாரம் கணினியை கண்ணிலே காட்டவில்லை. என்னடா நம்ம வேற வீட்டுலயும் , ஸ்கூல் யும் கணினி படிக்க போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கோம் இங்க என்னடான்ன எதையுமே கண்ணுல கூட காட்டல. சரி போகட்டும் ஒரு மேடம் தன் வகுப்புகள் நடத்தியது. நமக்கு அப்பவே கூச்ச சுபாவம் அதிகம் அதனால எதுவும் கேக்கல.  
நம்ம பாட்டுக்கு அவங்க எழுதி போடுறதா நோட்ல எழுதிகிட்டு வீட்டுக்கு போறது. அப்படி ஒரு வாரம் போயாச்சு...... அப்போ வகுப்புல நான் தான் சின்ன பையன். வேற எல்லாரும் பெரிய பசங்க பொண்ணுங்க, அதனால அடக்கமா உக்கார்ந்து படிக்க வேண்டியது தான். ஒரு வாரம் கழிச்சு ஒரு சார் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சாங்க மெதுவா அவங்க டைம்கு எஸ்கேப். அவரு முதல் நாளே கம்ப்யூட்டர்ல உக்கார வச்சாங்க. அப்போ எவளோ சந்தோசம் தெரியுமா . கருப்பு வெள்ளை கணினி, விண்டோஸ் இயங்கு தளம் . கொஞ்சம் கொஞ்சமா படிக்க தான் போறோம்னு நினச்சா அவரு நம்மள விட பெரிய ஆளு கேம்ஸ் போட்டு காட்டி விளையாடு ன்னு விட்டுட்டாரு. ஆஹா நல்ல ஒரு வாத்தியாரு கிடைத்திருக்கிர்றார் ன்னு சந்தோசம். ஆனா அது ரொம்ப நாளைக்கு நிலைக்கல என்ன ஆறு மாச கோர்ஸ் நாங்க கேம்ஸ் விளையாடி விளையாடி தொங்கிட்டு இருந்துது. அப்புறம் என்ன ரொம்ப ஸ்பீடா கோர்ஸ் முடிச்சிட்டார். நானும் வருத்தத்தோட விடை பெற்றேன் அந்த கல்வி நிலையத்தில் இருந்து. அப்புறம் 2000 இல் பள்ளியில் கணினி பாடம் வந்தது. அப்போது நம்ம தான் கிளாஸ்ல கணினி தெரிந்த ஒரே ஆள். அப்புறம் அலம்பலுக்கு கேக்கனுமாஎன்ன.......
சக மாணவர்களை விட என்னிடம் நல்ல அன்பாக இருந்தார் கணினி ஆசிரியை, அவங்க கிளாஸ் வந்தாலே ஒரே குஷி தான் போங்க. ஆனா ஒரே பிரச்சினை என்னன்னா ரெண்டே ரெண்டு கணினி தான் நாங்க பேரு ஒரு வகுப்புல அதனால லேப் தான் பிரச்சினை. அப்படியே ஒரு வருஷம் போயிரிச்சு. ஆனாலும் அந்த ஸ்கூல் வாழ்க்கைல மறக்க முடியாத இடம். அப்புறம் மேல்நிலை படிப்புக்கு தக்கலை ஸ்கூல் போயி அது பெரிய காமெடி ஆயி போச்சு..... சரி ஸ்கூல் லைப் பத்தி தனி பதிவா போடுவோம் . அப்புறம் ஸ்கூல் முடிச்சு நாகர்கோயில்ல ஒரு சென்டர் ல மீண்டும் கணினி படிப்பு அப்புறம் ஒரு மென்பொருள் தயாரிப்பு நிறுவனதில் வேலை கிடைத்தது. நெட்வொர்க் அட்மின் வேலை. அப்படியே படித்து, படித்து இப்போதும் கணினி படித்து கொண்டுதான் இருக்கிறேன். தீராத காதல் கணினி மீது...... அதனால் தானோ என்னவோ சாப்பிட கூட போகாமல் இப்படி டைப் பண்ணி கொண்டே இருக்கிறேன். அலுவலகத்தில் மடிகணினி வழங்கி இருக்கிறார்கள். இருபத்திநாலு மணிநேரம் பத்த மாட்டேங்குது சும்மா எதாவது பண்ணி கிட்டே இருக்கணும்...................... அனா ஒன்னு அன்னைக்கு நிறுத்தினது தான் கணினியில் கேம்ஸ் விளையாடுறது . இப்போ சுத்தமா விருப்பம் இல்ல ........ சென்னை வந்ததில் இருந்து ஒரே போர். என்ன செய்ய இப்படியே மொக்க பதிவா போட்டு மக்களோட கழுத்து அறுக்க வேண்டியது தான்.. என்னுடைய பதிவையும் மதிச்சு பின்னூடங்கள் போட்ட மோஹனுக்கு நன்றி..


பயணங்கள் முடிவதில்லை

       நானும் 2002 நவம்பர் மாதத்திலிருந்து சென்னை வந்து சென்று இருகிறேன். ஆனாலும் சென்ற வருடம் (2007)டிசம்பர் இல் இருந்து தான் இங்கேயே தொடர்ந்து இருக்கிறேன். அது வரைக்கும் அலுவலக தேவைகளுக்காக மாதம் இருமுறை வந்து சென்றிருப்பேன்.
2007 டிசம்பர் இல் இருந்து சென்னையில் ஒரு அலுவலகத்தில் வேலை கிடைத்ததால் இங்கேயே இருக்கிறேன். சென்ற மாதம் வீட்டிற்க்கு சென்றிருந்தேன். சும்மா சொல்ல கூடாது சரியான பயணம். வாழ்கையில் முதல் முறையாக நாகர்கோயில் வரை செல்ல 24 மணி நேர பயணம். ரயிலிலும் தனியார் பஸ்சிலும் டிக்கெட் கிடைக்காத காரணத்தால் அரசு பேருந்தில் பயணம். 
இரவு 7.30 பேருந்து. தாம்பரம் சென்ற போதே மணி 9.30 . அப்பொழுதே நினைதேன் ஆஹா மூன்று நாள் லீவ்ல ஒரு நாள் காலி. பேருந்து திருச்சி சென்றபொழுது காலைல ஏழு மணி. வெள்ளி சனி ஞாயிறு லீவ்ல வெள்ளி காலி ஆஹா ரெண்டு நாள் தானா. என்னடா இது நாலு மாசம் கழிச்சு வீட்டுக்கு போறோம். மூணு நாள் வீட்டுல இருக்கலாம்னு பார்த்தா இப்படி ஒரு ஆப்பு. பஸ் ஸ்டாண்ட்ல போனதும் டிரைவர் மாறினாங்க. சரி இவராவது ஸ்பீடா ஒட்டுவாருன்னு பார்த்த பழைய டிரைவர் எவ்வளோ பெட்டெர்.
புது டிரைவர் எந்த டீ கடை பார்த்தாலும் உடனே வண்டிய நிறுத்தி தம் போட்டு மெதுவா போறாரு. இருந்தாலும் இந்த பொம்பளைங்க நக்கலே தனி தான். ஒரு பொண்ணு அப்பாவுக்கு போன் பண்ணி "என்ன பஸ்ல ஏத்தி விட்டீங்க பேசாம மாட்டு வண்டியில போனாலே சீக்கிரம் போசலம்னு" கத்துது. ஆனாலும் டிரைவர் அப்படி தான் போய்கிட்டு இருக்காரு. நம்ம எதாவது பேசி இருக்கணும் தொரத்தி தொரத்தி அடிப்பாங்க.
மதுரைல போதும்போது மதியம் இரண்டு மணி. நல்ல வேளை பஸ் ஸ்டாண்ட்ல போகல. மதுரைல் இருந்து திருநெல்வேலி போகிறதுகுள்ள இரண்டு இடத்துல டீ பிரேக். என்னடா வாழ்க்கை இப்படி ஆயி போச்சே ...
ஒரு வழிய ஆறு மணி. டிரைவர் எங்கயோ போயிட்டு வந்தார். என்ன ஆச்சுன்னே தெரியல வண்டிக்கு அப்படி ஒரு ஸ்பீட். ஒரு மணி நேரம் நாற்பது நிமிஷம் பயணம் செய்ய வேண்டிய நாகர்கோயில் க்கு ஒரு மணி பத்து நிமிஷத்தில போயிட்டாரு. அப்படி ஒரு வழியா நாகர்கோயில் போயிட்டேன். அப்புறம் ரெண்டு பஸ் புடிச்சி வீட்டுக்கு போதும் போது ஒரு நாள் லீவ் காலி. சூப்பர் பயணம். தமிழ்நாடு அரசு பேருந்துக்கு ஒரு பெரிய கும்பிடு .......

எங்கும் தனிமை எதிலும் தனிமை

பள்ளி பருவத்திலிருந்தே நல்ல நண்பர்கள் இல்லாமல் தனியாகவே என் வாழ்க்கை இருக்கிறது. பத்தாம் வகுப்பிலிருந்து தான் எனக்கு இரண்டு நண்பர்கள் கிடைத்தார்கள் ஒருவன் பிரதீப் இன்னொருவன் பிரபின். ஆக எனக்கு இரண்டே இரண்டு நல்ல நண்பர்கள் தான். ஆனால் நான் இப்பொழுது சென்னையில் இருக்கிறேன். பிரதீப் ராணுவத்தில் இருக்கிறான். பிரபின் B.Tech படித்து கொண்டிருகிறான். எனவே மீண்டும் என் வாழ்வில் தனிமை ஆரம்பமானது. தற்போது என் அறையில் ஒரு நண்பன் இருக்கிறான் ஆனாலும் பழைய நண்பர்கள் அளவில் மனதிற்கு ஒத்து வரவில்லை.
என் மனதிற்கு சிறிது ஆறுதல் தருவது வலைபூக்கள் வாசிப்பது தான்,ஆக எனக்குள் பதிவு போட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இது என் தனிமைக்கு சிறிது ஆறுதல் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் பதிவையும் யார் மதித்து படிப்பார்கள் என்ற எண்ணமும் இல்லாமல் இல்லை. ஆசை யாரை விட்டது.
பதிவுலக நண்பர்கள் யாரவது கிடைபார்கள என்று பார்போம்......

என் நினைவு உலகம்

எல்லாருக்கும் என் இனிய வணக்கம்,
என் மனதின் எண்ணங்களை இங்கே பதிவு போடுகிறேன். இது என் முதல் முயற்சி

அன்புடன் 
கண்ணன்