Friday, September 5, 2008
சென்னை வாழ்க்கை
சென்னை எனக்கு மிகவும் பிடித்த ஊர். இங்கே பொழுது போவதே தெரிவதில்லை காலையில் எழுந்து ஆபீஸ் சென்று ரூம் திரும்புவது ஒரு மணி நேரம் போல உள்ளது. அதனால் தான் நான் சென்னையில் இருக்கிறேன் என்று கூட சொல்லலாம். இங்கே பிடிக்காத விஷயங்களும் நிறைய உள்ளன. கடற்கரை கேடுகெட்ட கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. அதனால் நான் கடற்கரை பக்கம் செல்வதே இல்லை. இன்றைய இளைய தலைமுறை எவ்வளவு மோசமாக நடக்கிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாகரணம். அப்புறம் உணவு, சென்னை வந்ததில் இருந்து எனக்கு பெரிய பிரச்சினையே உணவு தான். அம்மா கையால் சாப்பிட்ட திருப்தி இல்லை. சுவையும் ஓட்ட மாட்டேங்குது. அப்புறம் என்ன உயிர் வாழணுமே அதுக்காக ஏதோ சாப்பிட்டு வாழ்கைய ஓட்டுறேன். அப்புறம் காலையிலும் மாலையிலும் பேருந்து பயணம், எவ்வளவு மக்கள், பேருந்தின் உள்ளே பயணம் செய்வதை விட வெளியே தொங்கி செல்பவர்கள் தான் அதிகம். இந்த பிரச்சினைக்காக ஒன்பதரை மணி ஆபீஸ்க்கு காலைல எட்டு முற்பதுக்கே போகிறேன். மாலையில் என்ன செய்ய மெதுவாக செல்ல வேண்டியது தான். எவ்வளவு வாகனங்கள் தான் இங்கே சாலையை கடப்பதற்குள் உயிர் போயி வருகிறது. இங்கே யாருக்கும் நட்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை. பொழுது போக்காக பேசுகிறார்களே தவிர நட்பு என்ற ஓன்று இல்லை. ஏன் என்றே தெரியவில்லை. என் நண்பர்கள் போல யாரும் இன்னும் அமையவில்லை. இங்கும் நல்ல நண்பர்கள் அமைவார்கள் என்று நம்புகிறேன். என்னடா இவன் சென்னைய பற்றி குறை கூறி கொண்டே இருக்கிறேன் என்று கோபம் கூட வரலாம். ஆனால் என்ன கிராமத்தில் இருந்து வந்ததாலோ என்னவோ இன்னும் சென்னை மனதிற்கு இன்னும் பிடிக்கவில்லை. அரக்கத்தனமாக ஓடும் மனிதர்கள், இங்கு அனைவருக்கும் அவரவர் வேலையே பெரிதாக உள்ளது. நான் தங்கி இருக்கும் மேன்ஷனில் பக்கத்து அறையில் இருப்பவர்களையே தெரியவில்லை. உண்மையை சொன்னால் நான் இன்னும் பார்த்தது கூட இல்லை. இதற்க்கு பழைய மேன்ஷனே மேல்.அங்காவது நாலு பேரிடம் பேசி இருக்கலாம். அப்புறம் இடைஇடையே தோன்றும் ஊர் நியாபகம் ரொம்ப கஷ்டமப்பா சாமி. என்ன தான் என்றாலும் அம்மா கையால் சாப்பிட்டு வீட்டில் தூங்கும் சந்தோசத்திற்கு இணை ஆகாது. அடுத்த வெள்ளி கிழமை ஓணம். வீட்டிற்கு செல்லலாம் என்றால் லீவ் இல்லை. இங்கயே கொண்டாட வேண்டியது தான். அப்புறம் சென்னைய பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது, ஆமாம் நான் அதிகமாக செல்லும் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். அங்கே அடிக்கடி நாம் கொண்டு செல்லும் பைகளை பரிசோதிக்கிறார்கள் ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை. உள்ளே செல்லும் போது சோதனை செய்கிறார்கள் ஆனால் வெளியே வந்தால் ஒரு சோதனையும் கிடையாது. என்ன காரண என்று இன்னும் புரியவில்லை . நான் அதிகமாக ரயிலில் பயணம் செய்வதே கிடையாது . சென்னை வந்ததற்கு அப்புறம் தான் ரயிலில் அதிகமாக பயணம் செய்கிறேன் . முன்பு பிடிக்காமல் இருந்த ரயில் பயணம் இப்பொழுது பிடிக்கிறது. பேருந்தில் செல்வதே பிடிக்கவில்லை. நான் இன்று மட்டுமே இவ்வளவு பதிவு போட்டிருக்கும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் நான் செய்யும் வேலையின் தன்மையை பற்றி....... வேறு என்ன செய்ய இந்த வேலைக்கு வந்த பின்பு இப்படி தான் இருக்கிறது. நீங்கள் நினைக்கலாம் வெட்டியா சம்பளம் வாங்கிறானே என்று அப்படி எதுவும் இல்லை. வேலை பார்ப்பதன் இடையில் தான் இந்த வேலை.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஒரே சோகமா இருக்கே நண்பா....
இதையெல்லாம் தூக்கி போட்டிட்டு பொதுவான விசயமா எழுதுங்க... நமீதா, விஜயகாந்த், அப்படின்னு...
அப்போதான் உங்க "mind" டும் பிரெஷ் ஆகும். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
thanks na
Post a Comment