Friday, September 5, 2008

பயணங்கள் முடிவதில்லை

       நானும் 2002 நவம்பர் மாதத்திலிருந்து சென்னை வந்து சென்று இருகிறேன். ஆனாலும் சென்ற வருடம் (2007)டிசம்பர் இல் இருந்து தான் இங்கேயே தொடர்ந்து இருக்கிறேன். அது வரைக்கும் அலுவலக தேவைகளுக்காக மாதம் இருமுறை வந்து சென்றிருப்பேன்.
2007 டிசம்பர் இல் இருந்து சென்னையில் ஒரு அலுவலகத்தில் வேலை கிடைத்ததால் இங்கேயே இருக்கிறேன். சென்ற மாதம் வீட்டிற்க்கு சென்றிருந்தேன். சும்மா சொல்ல கூடாது சரியான பயணம். வாழ்கையில் முதல் முறையாக நாகர்கோயில் வரை செல்ல 24 மணி நேர பயணம். ரயிலிலும் தனியார் பஸ்சிலும் டிக்கெட் கிடைக்காத காரணத்தால் அரசு பேருந்தில் பயணம். 
இரவு 7.30 பேருந்து. தாம்பரம் சென்ற போதே மணி 9.30 . அப்பொழுதே நினைதேன் ஆஹா மூன்று நாள் லீவ்ல ஒரு நாள் காலி. பேருந்து திருச்சி சென்றபொழுது காலைல ஏழு மணி. வெள்ளி சனி ஞாயிறு லீவ்ல வெள்ளி காலி ஆஹா ரெண்டு நாள் தானா. என்னடா இது நாலு மாசம் கழிச்சு வீட்டுக்கு போறோம். மூணு நாள் வீட்டுல இருக்கலாம்னு பார்த்தா இப்படி ஒரு ஆப்பு. பஸ் ஸ்டாண்ட்ல போனதும் டிரைவர் மாறினாங்க. சரி இவராவது ஸ்பீடா ஒட்டுவாருன்னு பார்த்த பழைய டிரைவர் எவ்வளோ பெட்டெர்.
புது டிரைவர் எந்த டீ கடை பார்த்தாலும் உடனே வண்டிய நிறுத்தி தம் போட்டு மெதுவா போறாரு. இருந்தாலும் இந்த பொம்பளைங்க நக்கலே தனி தான். ஒரு பொண்ணு அப்பாவுக்கு போன் பண்ணி "என்ன பஸ்ல ஏத்தி விட்டீங்க பேசாம மாட்டு வண்டியில போனாலே சீக்கிரம் போசலம்னு" கத்துது. ஆனாலும் டிரைவர் அப்படி தான் போய்கிட்டு இருக்காரு. நம்ம எதாவது பேசி இருக்கணும் தொரத்தி தொரத்தி அடிப்பாங்க.
மதுரைல போதும்போது மதியம் இரண்டு மணி. நல்ல வேளை பஸ் ஸ்டாண்ட்ல போகல. மதுரைல் இருந்து திருநெல்வேலி போகிறதுகுள்ள இரண்டு இடத்துல டீ பிரேக். என்னடா வாழ்க்கை இப்படி ஆயி போச்சே ...
ஒரு வழிய ஆறு மணி. டிரைவர் எங்கயோ போயிட்டு வந்தார். என்ன ஆச்சுன்னே தெரியல வண்டிக்கு அப்படி ஒரு ஸ்பீட். ஒரு மணி நேரம் நாற்பது நிமிஷம் பயணம் செய்ய வேண்டிய நாகர்கோயில் க்கு ஒரு மணி பத்து நிமிஷத்தில போயிட்டாரு. அப்படி ஒரு வழியா நாகர்கோயில் போயிட்டேன். அப்புறம் ரெண்டு பஸ் புடிச்சி வீட்டுக்கு போதும் போது ஒரு நாள் லீவ் காலி. சூப்பர் பயணம். தமிழ்நாடு அரசு பேருந்துக்கு ஒரு பெரிய கும்பிடு .......

No comments: