Friday, September 5, 2008

மீண்டும் வருமா ?

உண்மையிலே வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருந்தது பள்ளிபருவத்தில் தான். என்னுடைய பள்ளி வாழ்கை 3 பள்ளிகளில் நடந்தது ஆரம்ப பள்ளி, மிகவும் கட்டுகோப்பான கான்வென்ட் ஸ்கூல் . அதனால் ரொம்ப ஒழுங்காக இருப்பேன். வீட்டில் இருந்து ஸ்கூல் போக ஒரு மூணு கிலோமீட்டர் இருக்கும் வயல் வரப்புகளில் நடந்து செல்ல வேண்டும். ஆனாலும் மழிசியாக இருக்கும். அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னை பிடிக்கும்( உண்மைய தான், நம்புங்க ). அப்போ நல்ல படிச்சிட்டு இருப்பேன் (யாரு கண்டான்னு கேக்குறது காதுல விழுது ) அதனால ஸ்கூல்ல எல்லாருக்கும் என்னை தெரியும். அதுல ரொம்ப பிடிச்சது எங்க வீட்டு பக்கத்துல ஒரு டீச்சர் இருக்காங்க. அவங்கள தான். ஆனா இப்போ அவங்கள பார்த்த ஏனோ ஓடி ஒளியுறேன். ஏன்னே தெரியல ( தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க ). அப்புறம் மூன்றாம் வகுப்பில் ஒரு ஆசிரியை அவங்க தான் என் கையெழுத்து அழகாக காரணம். அப்புறம் என்னை பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆயா. அவங்க கூட மூன்றாம் வகுப்பு வரை போனேன். அப்புறம் ரெண்டு வருஷம் தனிகாட்டு ராஜா தான். வழியில ஒரு குளம் வரும், அதில மழை காலத்துல மறுகால் வழியும். அப்போ கால் முட்டு அளவுக்கு தண்ணீர் இருக்கும். அப்புறம் வரப்பு மழைல இடிஞ்சு இருக்கும் அத தாண்டி குதிச்சு போகிற சந்தோசம் இருக்கே சொல்ல முடியாது. இப்போ அந்த வழி எல்லாம் மாறி போச்சு. வயல் எல்லாம் போயி ரோடு போட்டாச்சு. குளமும் கரை பெருசா கட்டி இப்போ மறுகால் எல்லாம் இல்லை. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எங்கள் தலைமை ஆசிரியைக்கு நல் ஆசிரியை விருது கிடைத்தது. அதை மிக பிரமாதமாக கொண்டாடினோம். இப்போ அந்த பள்ளிக்கூடம் எட்டாம் வகுப்பு வரை உள்ளது .

ஆறில் இருந்து பத்து வரை மற்றொரு பள்ளிக்கூடம், அங்கு சென்ற பின்பு தான் தனியாக பேருந்தில் பயணம் செய்ய ஆரம்பித்தேன். அங்கும் பரவாயில்லை. முதல் பள்ளி அளவிற்கு இல்லை என்றாலும் கட்டுகோப்பாக தான் இருந்தது. எட்டாம் வகுப்பு வரை பெண்கள் வகுப்பில் இல்லை நாங்கள் பசங்க மட்டும் தான். எங்களுக்கு ஒரு கணக்கு ஆசிரியர் வருவார், அவர் ரொம்ப கண்டிபனவரும் கூட , ஆனால் வகுப்பின் இடையே கதை சொல்லி தருவார்( வீட்டு பாடம் செய்ய விட்டால் அடி யும் கிடைக்கும்). ஆனாலும் எங்களுக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.  
அடுத்த பதிவுல தொடரும் ............. ( நாமளும் போடுவோம்ல தொடர் பதிவு )

No comments: