Tuesday, September 9, 2008

பெரியார் செய்தது என்ன ?

ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று அவரது வாழ்க்கை குறிப்பில் இவ்வாறு... "கங்கை ஆற்றின் கரையில் உள்ள இந்துக்களின் புனித நகரமான காசி நகரை (வாரணாசி) இவர் அடைந்தார். அங்கோ அன்ன சத்திரங்களில் இந்து மதத்தின் மற்றச் சாதியினர்க்கு அனுமதி மறுக்கப்பட்டுப் பார்ப்பனர்க்கு மட்டுமே தனிமதிப்புடன் உணவு வழங்கப்பட்டதால், திராவிட இனத்தவரான இவரால் எளிதாகச் சத்திரத்து இலவச உணவைப் பெற முடியவில்லை. சில நாள்கள் மிகக் கடுமையாகப் பட்டினியால் வாடிய இந்த எழில் தோற்றம் உள்ள இளைஞர் இராமசாமி, வேறு எந்த நேரிய வழியும் தோன்றாத நிலையில், ஓர் அன்ன சத்திரத்தில் நுழைவதற்கு முயன்றார். ஆனால் இவரது கரிய மீசை காட்டிக் கொடுத்துவிட்டது. எனவே, வாயில் காவலாளி சத்திரத்திற்குள் இவர் நுழைவதைத் தடுத்ததுடன், முரட்டுத்தனமாகத் தெருவிலே இவரைத் தள்ளிவிட்டான். அந்த நேரம், சத்திரத்தின் உள்ளே விருந்து முடிந்து விட்டதால், எஞ்சிய சோற்றுடன் எச்சில் இலைகள் தெருவிலே வீசி எறியப்பட்டன. கடந்த சில நாள்களாக வாட்டிய கடும் பட்டினியோ, அந்த எச்சில் இலைச் சோற்றைத் தெரு நாய்களுடன் போட்டியிட்டுத் தின்பதற்குக் கட்டாயப்படுத்தியது இராமசாமியை. காசியில் துளி அளவும் இரக்கம் அற்றுப் பார்ப்பனர் இழைத்த அவமானம் பெரியார் உள்ளத்தில் ஆழமான காயத்தை உண்டாக்கிற்று. அதுவே ஆரிய இனத்தின் மீதும் அவர்களின் படைப்புகளான கணக்கற்ற கடவுள்கள் மீதும் அழுத்தமான வெறுப்பு நெருப்பைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது. அவருக்கு அன்று ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அவர் ஊர் திரும்பியதும், ஊர் மக்களை வைத்து பழி வாங்கினார். இது தான் நடந்தது. உண்மையிலேயே அவர் பகுத்தறிவு பிரச்சாரம் செய்தார் எனில் , கிறிஸ்தவர்களின் ஞானஸ்தானம் எடுப்பதை ஏன் கண்டிக்கவில்லை. ஹிந்து இறந்தவரை அடக்கம் செய்வதை விமர்சித்த அவர் கிறிஸ்தவர்கள் செய்வதை ஏன் விமர்சிக்கலவில்லை. அவருடைய சில பகுத்தறிவு கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு எனிலும், அவரும் திராவிட கழகத்தினரும் முழுதும் இந்து எதிர்ப்பு பிரச்சாரம் மட்டுமே நடத்துகின்றனர். தலித்துகளுக்காக தான் அவர் குரல் கொடுத்தார் என்றால் அவர் முதலில் தலித் என்ற அடைமொழியை அவர்களிடம் இருந்து மாற்றியிருக்க வேண்டும். பார்ப்பானுக்கு எதிராக அவர்களை தூண்டி விட்டவர், தலித்தை தலிதகவே வளர்த்தார். இன்றும் அவர்கள் அப்படி தான் இருகின்றனர். இன்று பெரியார் வழியில் வந்து ஆட்சியில் இருப்பவரால் பெரியார் சொன்னது போல, தமிழ்நாட்டில் இனிமேல் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி இல்லை, பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு எல்லாம் என்று அறிவிக்க இயலுமா?. கண்டிப்பாக இயலாது அவர் கொண்டு வந்தாலும் தலித்துகள் ஒத்துக்க மாட்டார்கள், திராவிட கழகத்தினர் விட மாட்டார்கள். அவர்களுக்கு என்றும் தலித்துகள் தேவை, அவர்கள் இல்லையேல் அவர்களுக்கு வேறு வேலை இல்லை எனவே மீண்டும் அவர்களை அடிமை படுத்த மட்டும் தான் பார்பார்கள். விநாயகர் சதுர்த்திக்கு கட்டுரை எழுதிய வீரமணி ஆணைமுகத்துடன் யாரவது பிறபார்களா ? என்று கட்டுரை எழுதி உள்ளார். பகுத்தறிவு பேசும் இவரால் புனித வெள்ளி மட்டும் உயிர்ப்பு (ஈஸ்டர்) க்கு இறந்தவர் யாரவது மூன்று நாளைக்கு அப்புறம் உயிர்த்து எழுந்து வரமுடியுமா என்று கேட்க இயலுமா ?. அப்படி கேட்டால் அடுத்த நாளே தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் அவர் வீட்டின் முன்னால் திரண்டு வருவார்கள். போலி பகுத்தறிவு பேசும் இவர்களை நம்பி இளைய தலைமுறையினர் ஏமாற மாட்டார்கள்.

No comments: