Tuesday, September 9, 2008

இன்றைய தமிழகத்தின் தேவைகள்......................

பசித்தவனுக்கு மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடுப்பதே சிறந்தது. இன்றய விலைவாசிக்கு, ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுப்பது ஒரு தீர்வாகாது. இதர பொருட்கள் வாங்க அவன் செலவு செய்யும் தொகை, அரிசி வாங்குவதை விட முப்பது மடங்கு இருக்கிறது. நானூறு கோடி ரூபாய் செலவில் ஒரு ரூபாய் அரிசி திட்டத்தை நிறைவேற்றுவதை விட நல்லது அத்தொகையை உபயோகப்படுத்தி மளிகை பொருட்களின் விலையை குறைப்பதற்கு முயற்சிக்கலாம், பெட்ரோலிய பொருட்களின் வரியை குறைக்கலாம். இப்பொழுது மின்சாரம் இருக்கும் நேரத்தை விட மின்சாரம் இல்லாத நேரம் தான் அதிகமாக உள்ளது. சரி ஜனரேட்டர் போடலாம் என்றல் டீசல் தட்டுபாடு எவ்வாறு இங்கு வாழ்வது? நண்பர் ஒருவரின் பதிவில் கண்ட கவிதை "இந்த ஆட்சியில் வாழ்வதை விட சாவது மேல் என்று மின் கம்பியைத் தொட்டால், சே.. மின்வெட்டாம்". உண்மைதான்.
சரி இவர்கள் வழங்கும் அரிசியாவது ஒழுங்காக போய் சேருகிறதா என்றால் அதுவும் இல்லை. கடத்தல்காரர்கள் கொண்டு செல்கிறார்கள். மின் சிக்கனம் என்று கூறுகிறார்களே தவிர அதிகார மட்டத்தில் இன்று வரைக்கும் சிக்கனம் ஆரம்பிக்கவே இல்லை என்று தான் கூற வேணும். வீணாக ஓடும் மின் விசிறிகள், பகலிலும் எரியும் மின் விளக்குகள். யாரும் கண்டு கொள்வதே இல்லை. அமைச்சர் ஒருவர் அதிகாலை மின்தடை ஏற்படின் ஆழ்ந்த உறக்கம் இருந்தால் கொசு அல்லது யானை கடித்தால் கூட தெரியாது என்கிறார். தொழில் துறை அமைச்சரோ இன்னும் இரண்டு அரை ஆண்டுகள் இப்படித்தான் இருக்கும் சிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் பொருத்தருள வேண்டும் என்கிறார். பல பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு இருபத்திநாலு மணி நேரம் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கும் அரசாங்கத்திற்கு உள்நாட்டு முதலீட்டார்களுக்கு ஏன் மின்சாரம் வழங்க முடிவதில்லை? தேசியம் பேசும் கமரேடுகளும் இதை பற்றி கண்டு கொள்வதே இல்லை. தமிழா ஏன் உன் நிலை இவ்வாறு உள்ளது ? நீ யோசிக்கவே மாட்டாயா ? இவ்வாறு செல்வதானால் நம் நிலை இன்னும் மோசமாக சென்று விடும்.

2 comments:

Anonymous said...

//இந்த ஆட்சியில் வாழ்வதை விட சாவது மேல் என்று மின் கம்பியைத் தொட்டால், சே.. மின்வெட்டாம்//

:) நச் !

Anonymous said...

பின்னோட்டத்துக்கு நன்றி சேவியர்.... அது ஒரு வலை பதிவு நண்பரின் கவிதை